For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை மறுநாள் கூடுகிறது கர்நாடக அமைச்சரவை.. ஜெ. வழக்கு அப்பீல் பற்றி முடிவு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை கூட்டம் வரும் திங்கள்கிழமை கூடுகிறது. அன்றையதினம், ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்த நிலையில், அதை எதிர்த்து அப்பீல் செய்வதா, வேண்டாமா என்பதை அமைச்சரவை கூட்டி முடிவெடுக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டமிட்டார்.

Jaya case: Karnataka cabinet, which is to meet on Monday, will take a decision on filing the appeal

கடந்த 21ம் தேதி, கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஜெயலலிதா தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட நிலையில், கர்நாடக அமைச்சரவை வரும் திங்கள்கிழமை கூடுகிறது.

அப்போது, அப்பீல் செல்வது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களூரில் நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் செயத்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வியும், கர்நாடக அரசு அரசியலை பார்க்காது, சட்டத்தின்படிதான் செயல்படும் என்று தெரிவித்தார்.

English summary
Sources in the Karnataka State Secretariat said the Cabinet, which is to meet on Monday, will take a decision on filing the appeal in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X