மத்திய அரசிடம் இருந்து 5000 கோடி வர வேண்டி இருக்கு.. நிதியை உடனடியாக தர ஜெயக்குமார் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்திற்கு வர வேண்டி நிதியை உடனடியாக வழங்குவது குறித்து இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை இன்று மாலை சந்தித்து பேசிய பின்னர் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கக் கேட்டுக் கொண்டேன் கூறினார்.

Jayakumar meets Arun Jaitley

மேலும், ஆதிதிராவிடர் நலத்திட்டங்களுக்கு 1986.8 கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது என்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 244 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி 1,340 கோடி ரூபாயும் வர வேண்டியுள்ளதை உடனடியாக தருமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக ஜெயக்குமார் கூறினார்.

வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு 342 கோடி ரூபாயும், 4 துறைமுகங்கள் கட்டிய வகையில் 115 கோடி ரூபாயும், கைத்தறித்துறைக்கு 65.3 கோடி ரூபாயும் என மொத்தத்தில் 5,000 கோடி வரை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டி உள்ளது. இந்த நிதியை வழங்க அமைச்சரிடம் வலியுறுத்தியதாக ஜெயக்குமார் கூறினார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
TN finance minister Jayakumar meets Union Minister Arun Jaitley in Delhi today.
Please Wait while comments are loading...