தமிழக மீனவர்கள் பிரச்சனை தீருமா... சுஷ்மா சுவராஜுடன் ஜெயக்குமார் சந்திப்பு

தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழக மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லி சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் இடையே நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை, தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

Jayakumar meets Sushma Swaraj

மேலும், சிறையில் உள்ள மீனவர்களை விடுவிப்பது மற்றும் இலங்கையிடம் உள்ள படகுகளை மீட்பது உள்ளிட்ட விவகாரங்களும் ஆலோசனையில் இடம் பெற்றது. அண்மையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக தமிழக அமைச்சர் டெல்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியையும் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேச உள்ளார்.

English summary
Minister of fishery Jayakumar meets Union Minister Sushma Swaraj to discuss about Tamil fisherman issue today.
Please Wait while comments are loading...