For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: ஜெ.வழக்கில் எனக்கு தனிப்பட்ட இன்டரஸ்ட் இல்லை, கடமையைத்தான் செய்தேன்: பவானிசிங் பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு தனிப்பட்ட விருப்பு எதுவும் கிடையாது, நான் எனது கடமையைத்தான் செய்தேன் என்று சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்கறிஞரான பவானிசிங் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதிட்டவர் பவானிசிங். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்திருந்தது. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறையும், 100 கோடி அபராதமும் விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

இந்நிலையில், தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் தண்டனை பெற்ற மற்ற மூவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக, அரசு வழக்கறிஞராக யாரையும் கர்நாடக அரசு நியமிக்கவில்லை. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அனுமதியின் பேரில் வக்காலத்து வாங்கிய பவானிசிங், அரசு வழக்கறிஞராக வாதிட்டு வருகிறார்.

Jayalalithaa case: I have no personal interest in it, says SPP Bhavani Singh

பவானிசிங் மீது நம்பிக்கையில்லை என்றும், அவர் முறைப்படியாக அரசு வக்கீலாக நியமிக்கப்படவில்லை என்றும் திமுக அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மதன் லோகூர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தது. கீழ்நீதிமன்றத்தில் ஆஜரானதை காரணமாக வைத்துக்கொண்டு, ஒரு வக்கீல் உயர் நீதிமன்றத்தில் அதே வழக்கில் அனுமதியின்றி ஆஜரானது தவறு என்று லோகூர் தீர்ப்பளித்தார். ஆனால், பவானிசிங் ஆஜரானது சரிதான் என்று பானுமதி தீர்ப்பளித்தார்.

எனவே வழக்கு விசாரணை மூவர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை, ஏப்ரல் 21ம்தேதி அந்த அமர்வு விசாரணையை ஆரம்பிக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான், ஜெ. அப்பீல் மனு மீதான தீர்ப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் அமையும் என்பதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சர்ச்சைகளின் நடு நாயகமாக இருப்பவர் பவானிசிங்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 'ஒன்இந்தியா' செய்தி இணையதளத்திடம் பவானிசிங் கூறியதாவது:

எனது நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவருக்கும், அரசுக்கும் இடையேதான் வழக்கு நடந்து வருகிறது. எனவே, இந்த வழக்கில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது.

நான் சிறப்பு நீதிமன்றத்திற்கான அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன். அங்கு, எனது பணி முடிந்ததால், உயர் நீதிமன்றத்தில் பணியை தொடர்ந்தேன். நான் எனது கடமையைத்தான் செய்தேன்.

எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின்போது எனது தரப்பில் வாதிடப்போவதில்லை. ஏற்கனவே, இரு நபர் பெஞ்ச் விசாரிக்கும்போதும், எனது தரப்பில் வாதம் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறு பவானிசிங் கூறினார்.

English summary
A three judge Bench of the Supreme Court will commence hearing on a very important plea in the J Jayalalithaa case. The Bench would have to decide whether the appointment of Bhavani Singh, the Special Public Prosecutor in the case is legal or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X