For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா நலம்பெற மைசூர் சாமுண்டீஸ்வரிக்கு 1.6 கோடி தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மைசூர் : முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணடமடைய வேண்டி மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலின் கணேசர் மற்றும் ஆஞ்சநேயருக்கு ரூ. 1.6 கோடி மதிப்பில் தங்க, வெள்ளி கவசங்கள் காணிக்கையாக அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது குல தெய்வமான சாமுண்டீஸ்வரியிடம் ஜெயலலிதா வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி வேண்டுதல் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Jayalalithaa's health: ADMK workers prayer crore at Mysuru's Chamundeshwari Temple

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோவில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாமுண்டீஸ்வரிக்கு காணிக்கை

அதிமுக தொண்டர்கள் சிலர் வெள்ளிக்கிழமையன்று மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்றனர். அங்கு உள்ள கணேசர் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ. 42,29,614 மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கக் கவசங்களையும், ஆஞ்சநேயருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி கவசங்களையும் காணிக்கையாக அளித்தனர்.

கொடநாடு

கணேசருக்கு அளித்த நன்கொடையை ஜெயா பப்ளிகேஷன் பெயரிலும், ஆஞ்சநேயருக்கு அளித்த நன்கொடையை கொடநாடு என்ற முகவரியிலும் அளித்துள்ளனர். கவசம், கிரீடம், சங்கு, கடாயுதம், தங்க தட்டு ஆகியவை நன்கொடையாக வழங்கபட்டுள்ளன. இதையடுத்து, கோயிலுக்கு வந்த ஆதரவாளர்களுக்கு நன்கொடைக்கான ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை அனைத்தும் சாமுண்டீஸ்வரி கோயில் மேலாண்மை கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

வேண்டுதல் நிறைவேற்றம்

காணிக்கை பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஜெயலலிதா சார்பில், அம்மனுக்கு சிறப்பு சண்டி ஹோமம் நடைபெற்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது குல தெய்வமான சாமுண்டீஸ்வரியிடம் ஜெயலலிதா வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி வேண்டுதல் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜெ., இஷ்ட தெய்வம்

ஜெயலலிதாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்திலுள்ளது. சிறுவயது முதலே ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம், மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியாகும். கடந்த 2011ம் ஆண்டு தனது 63வது பிறந்தநாளின் போது சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று வழிபட்டார் ஜெயலலிதா. இதனையடுத்து ஜெயலலிதா 2014ம் ஆண்டு சிறையில் இருந்த போது அதிமுக தொண்டர்கள் மைசூர் சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் காணிக்கை பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளன.

English summary
Jayalalithaa followers offered gold, silver worth Rs 1.60 crore to the presiding deity Chamundeshwari and performed special prayers for her well being. J. Jayalalithaa is said to be on the road to recovering from her illness at the Apollo Hospital in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X