For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கிடையே எண்ணெய் வள ஆய்வுக்கான ஒப்பந்தம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் , டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வியட்நாமின் கடற்பாதுகாப்புக்காக போர்க்கப்பல்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

Joint Statement on the State Visit of Prime Minister of the Socialist Republic of Vietnam to India

பேச்சுவார்த்தையின் முடிவில் தென் சீனக்கடல் பகுதியில் வியட்நாம் அருகே எண்ணெய் வள ஆய்வுக்கு ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் ஒரு முக்கிய தூணாக வியட்நாம் விளங்குகிறது என்பதை இந்தியா மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த பிராந்தியம் மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பை வியட்நாம் வரவேற்கிறது என்று கூறப்பட்டு உள்ளது.

English summary
The Prime Minister of the Socialist Republic of Vietnam, Nguyen Tan Dung accompanied by his spouse paid a State Visit to the Republic of India from 27-28 October 2014 at the invitation of the Prime Minister of India, Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X