For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகதாது விவகாரம்.. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற கண்டன பேரணியால் பெங்களூர் குலுங்கியது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: மேகேதாது திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பெங்களூரு மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான கன்னட அமைப்பினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரு கேஜி ரோடு பகுதியிலுள்ள டவுன்ஹால் முதல் மகாராணிகல்லூரி ரோடு அமைந்துள்ள சுதந்திர பூங்கா வரை இன்று மதியம் கன்னட அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர்.

கர்நாடக ரக்ஷனாவேதிகே, ஜெய் கர்நாடகா, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி உள்ளிட்ட பல கன்னட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஊர்வலத்தால், கேஜி ரோடு, மைசூர் வங்கி சர்க்கிள், பேலஸ் ரோடு, சுதந்திர பூங்கா வரையில் டிராபிக் நெரிசல் கடுமையாக இருந்தது. வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஊர்வலத்தில் பங்கேற்றோர் தமிழக அரசுக்கு எதிராகவும், அதிமுக, பொதுச்செயலாளர், ஜெயலலிதா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் கோஷமிட்டபடி சென்றனர்.

English summary
Kannada organization procession held from Town hall to Freedom park, via, Police corner, Mysore bank circle, Palace road, Maharani circle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X