For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மாவை' மிஞ்சிய கர்நாடக அதிகாரி மனைவி.. அதிரடி ரெய்டில் சிக்கிய 7000 சேலைகள்

அதிகாரி, கரியப்பா கர்னலின் மனைவி சேர்த்து வைத்திருந்த 7000 சேலைகளை பார்த்து அதிகாரிகள் மலைத்துப்போயினர். அவற்றை பறிமுதல் செய்தனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹூப்ளி: கர்நாடக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் ரெய்டு நடத்தி 7 ஆயிரம் சேலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடக வணிக வரித்துறை உதவி கமிஷனர் அந்தஸ்திலுள்ளவர் கரியப்பா கர்னல். இவருக்கு பெங்களூரு, ஹூப்ளி நகரங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள், அவரின் நண்பரின் வீடுகளில் இன்று ஒரே நாளில் கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.

Karnataka ACB seizes properties of tax official

இந்த ரெய்டில், கரியப்பா கர்னலின் மனைவி சேர்த்து வைத்திருந்த 7000 சேலைகளை பார்த்து அதிகாரிகள் மலைத்துப்போயினர். அவற்றை பறிமுதல் செய்தனர்.

ஒவ்வொரு சேலையும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கர்நாடக மீடியாக்கள், இதை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையுடன் ஒப்பிட்டு, "அம்மாவை மீறிவிட்டார் அதிகாரியின் மனைவி" என செய்தி ஒளிபரப்பி வருகின்றன.

English summary
Karnataka Anti Corruption Bureau officials searched the residences of a Commercial Tax Department official on Tuesday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X