For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் 3 தமிழர்கள்.. கர்நாடக இளைஞர்கள் முன்னிலை: உளவுத்துறை

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு, கர்நாடகாவில் இருந்துதான் அதிகமாக ஆட்கள் சென்று சேருவது தெரியவந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இப்போதும் தீவிரவாத அந்த தீவிரவாத அமைப்பில் செயல்பட்டுவருவதும் அம்பலமாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு, ஆட்களை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர், சுல்தான் ஆர்மர். அன்சர்-உல்-தவ்ஹித் என்ற இயக்கத்தை நிறுவியதும் இவரே.

ஆர்மரின் சொந்த ஊர், கர்நாடக மாநிலம் பத்கல். இந்த நகரில் இருந்துதான் ஏகப்பட்ட தீவிரவாதிகள் உருவாகியுள்ளனர் என்கிறது காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆவணங்கள்.

முக்கிய புள்ளி சாவு

முக்கிய புள்ளி சாவு

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும், அரசு படைகளுக்கும் சமீபத்தில் நடைபெற்ற சண்டையில் ஆர்மர் கொல்லப்பட்டதாக சமூக தளங்களில் தகவல் பரவியது.

ஆறு இந்தியர்கள்

ஆறு இந்தியர்கள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்த, இந்தியர்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, இந்திய அசு அறிவித்துள்ளது. இவர்கள் சிரியா மற்றும் ஈராக்கில் உயிரிழந்தனர்.

பெயர் விவரம்

பெயர் விவரம்

இந்நிலையில், இன்று இந்திய அரசு வெளியிட்ட தகவலில், கொல்லப்பட்ட இந்தியர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த, அத்தீப் வசீம் முகமது, பெங்களூர் சிவாஜிநகரை சேர்ந்த முகமது உமர் சுபான், பத்கலை சேர்ந்த மவுலானா அப்துல் கபீர் சுல்தான் ஆர்மர், மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்த ஷகீம் ஃபரூக், பெங்களூரை சேர்ந்த பைஸ் மசூத், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது சஜித் ஆகியோர் உயிரிழந்தவர்கள்.

தமிழகத்திலிருந்து 3 பேர்

தமிழகத்திலிருந்து 3 பேர்

மத்திய உள்துறை அமைச்ககம் தயாரித்துள்ள பட்டியல்படி, இந்தியாவை சேர்ந்த 23 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் உள்ளனர். அதில் 5 பேர் கர்நாடகாவையும், 3 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள். கேரளா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் தலா 4 பேர் உள்ளனர்.

சகோதரர் பொறுப்பு

சகோதரர் பொறுப்பு

சுல்தான் ஆர்மர் உயிரிழந்தது உறுதியாகியுள்ள நிலையில், அவரது சகோதரர் ஷாபி ஆர்மரின் நடவடிக்கையை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஏனெனில் ஆர்மர் இறந்ததை தொடர்ந்து ஷாபிதான், இந்தியாவில் இருந்து ஆள்பிடிக்கும் வேலையை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

English summary
There had been a great deal of confusion over the status of Sultan Armar, the head and founder of the Ansar-ul-Tawhid which is the recruiting agency for the ISIS in India. Armar a resident of Bhatkal was a major operative and had even been declared the emir of the Ansar in a video message by none other than Abu Bakr al-Bhagdadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X