For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் தாக்குதலின் பின்னணியில் உள்ள பல்வேறு காரணங்களும், சதிகளும்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் ஒரு நோக்கத்திற்காக மட்டுமின்றி, பல்வேறு வகையான சதி திட்டத்துடன் செயல்படுத்தப்பட்ட தாக்குதலாகும். காஷ்மீரில் தங்களது பலம் குறைந்மதுவிட்டாலும் தாங்கள் முழுவதுமாக ஓய்ந்துவிடவில்லை என்பதை காண்பிக்க இந்த தாக்குதல் தீவிரவாதிகளுக்கு மிவும் உதவி செய்யும்.

உளவுத்துறை அதிகாரிகள் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை ஒருங்கிணைக்க, இந்த குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொண்டனர். மற்றொரு முக்கியமான காரணமும் இந்த தாக்குலின் பின்னணியில் உள்ளது.

Kashmir attack had more than one reason

ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கு வேலை இல்லை என்று அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு காண்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த தாக்குதலின் முக்கிமான நோக்கமாகும். காஷ்மீருக்காக போராடப்போகிறோம் என்று கூறுவோர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. பாக். தீவிரவாதிகள் மட்டுமின்றி, ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளும் காஷ்மீரை காரணம் காட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

இதில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இன்னும் பலமாக தங்கள் நடவடிக்கைகளை இந்தியாவில் தொடங்கவில்லை. ஆனால், அல்கொய்தா தனது கிளையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உலக இஸ்லாமிய கவுன்சில் அமைப்பில் காஷ்மீரையும் இணைக்க வேண்டும் என்பது தீவிரவாதிகளின் திட்டமாகும். இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் சேர்ந்து செயலாற்றவே விரும்புகிறது. வேறு அமைப்புகளை ஏற்றுக்கொள்ள அது தயாராக இல்லை.

ஆனால் தெரிக்-இ-தாலிபான், ஏகியூஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளும் காஷ்மீருக்காக போராடுவதாக அறிவித்துள்ளன. எனவே காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து பிரிக்கும் முயற்சியாக இன்றி, பெரும் அரசியலே இதன் பின்னால் இருப்பது தெளிவாகிறது. எனவே காஷ்மீருக்கான போராட்டத்தில் யார் முன்னணியில் இருப்பது என்பதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும், பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எனவே மும்பை தாக்குதலை போல பெரிய அளவில் தாக்குதல் நடத்தி தனது பராக்கிரமத்தை நிலை நாட்ட முடிவு செய்த ஐஎஸ்ஐ, அந்த பிராந்தியத்தில் உள்ள தனது நண்பன் லஷ்கர்-இ-தொய்பா மூலமாக பெரும் தாக்குதலை நடத்தி இந்திய ராணுவத்தினரை கொன்று குவித்துள்ளது. வீரமும், தேசப்பற்றும் மிக்க நமது ராணுவ வீரர்கள், அதிரடியாக தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி தரையில் கிடத்தியிராவிட்டால் மும்பை சம்பவத்தை போலவே, இங்கும் மூன்று நாட்கள் தாக்குதல் நீண்டிருக்க வாய்ப்பு இருந்தது.

ஏனெனில், மூன்றாம் கட்ட தேர்தல் வரையில் இந்த தாக்குதலை நடத்தியிருந்தால், அதன் மூலமாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வாக்களிப்பதை தடுக்க வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் சதியாக இருந்தது. அதே நேரம் இந்த சதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் பங்களிப்பு இருப்பதை மறுக்க முடியாது என்கின்றனர் பாதுகாப்பு துறை வட்டாரத்தில். தீரம்மிக்க, இந்திய ராணுவத்தின் எதிரில் நின்று சண்டை போட முடியாமல் முதுகை காண்பித்து ஓடிய பல தோல்வி வரலாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ளது.

எனவே அப்பாவிகளுக்கு மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கி அவர்களுக்கு ஆயுத சப்ளை, பண வசதி செய்து தரும் முதுகில் குத்தும் வேலையை பாக்.ராணுவம் செய்கிறது. காஷ்மீர் தாக்குதல் மூலமும், பாக். ராணுவத்தின் கோர முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐஎஸ்ஐ மீதான தீவிரவாதிகளின் நெருக்கடி சமீபமாக அதிகரித்து வந்துள்ளது. லஷ்கர் தீவிரவாதிகளுடன் சமீபத்தில் ஐஎஸ்ஐ நடத்திய ஆலோசனையின்போது, தீவிரவாதி ஹபீஸ் சையது, ஐஎஸ்ஐயிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளான். காஷ்மீர் மக்களுக்கு நம்மீது உள்ள பயம் போய் இயல்பு வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டார்கள், இதை கெடுத்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளான்.

காஷ்மீரிலுள்ள பிரிவினைவாதிகளுக்கும் ஐஎஸ்ஐ மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில்தான் இத்தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானின் தேர்தல்களில், இந்த தாக்குதல் வாக்கு அறுவடையாக மாறி பலனை தரும் என்று ஆளும் தரம்பு நம்புகிறது.

English summary
The synchronised attacks at the Valley yesterday had more than one agenda. While the first message of the terrorists was to show the Indian establishment that they were down but not out the other was to stamp their authority in the Valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X