For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு... பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: உம்மன்சாண்டி உறுதி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மதுவிலக்கு கொள்கையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் உம்மன்சாண்டி.

அடுத்த பத்து ஆண்டிற்குள் கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது அம்மாநில அரசு. இதன்படி, பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன/

Kerala CM Oommen Chandy meets Bishop Remigiose Inchananiyil over changes in liquor policy

இந்நிலையில், மதுவிலக்கு அமல்படுத்துவதற்கு எதிராக கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் ஆதரவு பெற்ற ‘மத்ய விருதா சமிதி' மவுன போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தாமரச்சேரி பிஷப் ரெமிஜியசை சந்தித்து பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உம்மன்சாண்டி பேசுகையில், ‘அரசு மதுவிலக்கு கொள்கையை கடைபிடிப்பதற்கான சூழ்நிலையை விளக்கி அவரை சமாதானப்படுத்தினேன். மதுவிலக்கு கொள்கையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. படிப்படியாக மாநிலத்தில் மது விற்பனை குறைக்கப்பட்டு, 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' எனத் தெரிவித்தார்.

English summary
In an apparent move to pacify the Church that expressed strong reservation over government diluting the new liquor policy, Kerala Chief Minister OommenChandy met Thamarassery Bishop RemigioseInchananiyil and held talks with him here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X