For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது: கிரண் ரிஜிஜு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி தொடர்ந்து விவாதம் நடந்து வரும் நிலையில், அவனை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு எதர்ப்பு தெரிவித்ததாகவும், டெல்லி ஹைகோர்ட் விடுவிக்க உத்தரவிட்டதாகவும் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஜோதிசிங் என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங்கை கொடூரமாக தாக்கவும் செய்தது. அவரது பிறப்புறுப்பில் இரும்புக் குழாயால் தாக்கியதால் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக சேதமடைந்தன. இதன் விளைவாக ஜோதி சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

Kiren Rijiju says, Centre Had Opposed Juvenile Convict's Release

நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 4 கொண்டார். 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இளங்குற்றவாளி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளம் குற்றவாளியின் சிறைத் தண்டனை சட்டப்படி முடிந்து விட்டதால் அவரது விடுதலையை தடுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி விட்டது.

இந்நிலையில் வழக்கில் மூன்று ஆண்டு தண்டனை பெற்ற சிறார் குற்றவாளி நாளை விடுதலை செய்யப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைக்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுத்ததையடுத்து, இன்று அவன் சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, ரகசிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

இளம் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி தொடர்ந்து விவாதம் நடந்து வரும் நிலையில், அவனை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், டெல்லி ஹைகோர்ட் விடுவிக்க உத்தரவிட்டதாகவும் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இதுற்றி அவர் மேலும் கூறுகையில், சிறார் குற்றவாளியை விடுதலை செய்வதற்கு' மத்திய அரசு கொள்கை அளவில் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்படி, டெல்லி ஹைகோர்டில் எங்கள் நிலைப்பாட்டை முன்வைத்தோம். சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞரும், சிறார் குற்றவாளியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கையையும் அளித்தார்.

சிறார் வயது வரம்பை குறைக்கும் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் இடையூறுகளால் மாநிலங்களவையில் அந்த சட்டத்திற்கு அனுமதி பெற முடியவில்லை" என்றார்.

English summary
Minister of State for Home Kiren Rijiju says, Centre Had Opposed Juvenile Convict's Release
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X