For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவில் வரலாறு படைத்த இந்திய கடற்படை

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: முழுக்க முழுக்க நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான நேவல் ப்ரோட்டோடைப்-1(என்.பி.-1) கோவாவின் ஐஎன்எஸ் ஹன்ஸாவில் உள்ள கடலோர சோதனை தளத்தில் இருந்து சனிக்கிழமை லான்ச் செய்யப்பட்டது.

அந்த விமானத்தை பெங்களூரில் உள்ள தேசிய விமான சோதனை மையத்தின் தலைமை விமானி காம்ரேட் ஜெய்தீப் மாலோன்கர் ஓட்டினார். அந்த விமானம் ஓரத்தில் வளைவாக இருந்த ஓடுதளத்தில் இருந்து ஸ்கீ ஜம்ப் செய்தது.

எதிர்பார்த்ததை விட விமானம் நன்றாக செயல்பட்டதாக அது முதல்முதலில் பறந்ததை நேரில் பார்த்தவர்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தனர்.

LCA Navy creates history in Goa; India joins a super elite club

வரலாறு படைத்த கடற்படை

என்.பி.-1 முதல் பயணத்திலேயே சமூகமாக சென்று இந்த திடத்திற்கு ஊக்கம் அளித்துள்ளது என்று டிஆர்டிஓவின் (ஏரோ) டைரக்டர் ஜெனரல் டாக்டர் கே. தமிழ்மணி ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் கடினமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம். எம்.பி.-1 கடற்படையில் புதிய வரலாறு படைத்துள்ளது. என்.பி.-1 மேலும் 5 முறை சோதனை செய்யப்படும். சோதனையில் பெறும் புள்ளிகளை வைத்து அடுத்தக் கட்ட சோதனைக்கு தயாராவோம். இலகுரக போர்விமானமான என்.பி.-2 விரைவில் பெங்களூரில் சோதனை செய்யப்படும்.

போர் விமானங்களை தாங்கிச் செல்லும் இந்திய கப்பல்களில் இருந்து உள்நாட்டு தயாரிப்பில் உருவான பல போர் விமானங்கள் பறப்பதை விரைவில் பார்ப்போம் என நம்புகிறோம் என்றார்.

LCA Navy creates history in Goa; India joins a super elite club

டிசைன் குழுக்கள்

அந்த போர் விமானத்திற்கு இந்திய கடற்படை இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த திட்டம் தாமதமாவது குறித்து கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவன் அண்மையில் கவலை தெரிவித்தார்.

என்.பி.-1 விமானத்தின் ஸ்கீ ஜம்ப் டிசைன் குழுவின் முயற்சியால் சாத்தியம் ஆனது என கடற்படை துணை தலைவர்(விமானம்) ரியர் அட்மிரல் டிஎம் சூடன் டெல்லியில் இருந்து ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். என்.பி.-1 டேக் ஆஃப் ஆனது ஒரு வரலாற்று நிகழ்ச்சி ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LCA Navy creates history in Goa; India joins a super elite club

விமானம்

என்.பி.-1 டேக் ஆஃப் ஆனது டெக்ஸ்ட் புக் ஸ்டைல் ஆகும் என்று ஏரோனாட்டிக்கல் மேம்பாட்டு ஏஜென்சியின் தலைவர் பி.எஸ். சுப்பிரமணியம் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் உக்ரைனை அடுத்து இத்தகையை லான்ச்சை நடத்திய மூன்றாவது நாடு இந்தியா தான். இந்த தொழில்நுட்பம் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. விமானம் ஓடுதளத்தில் நுழையும்போது, ஓடும்போது, வெளியேறும்போது அதன் செயல்களை நம்மால் கணிக்க முடியும். என்.பி.-1 விமானத்தில் அரெஸ்டர் ஹூக் பொருத்தப்படவில்லை. ஸ்கீ ஜம்ப் போன்று அரெஸ்டர் ஹூக் லேண்டிங் ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல. இன்று நாம் படைத்த சாதனை பல காலம் நம் நினைவில் இருக்கும் என்றார்.

English summary
India on Saturday created a slice of naval history when the first home-grown naval jet Light Combat Aircraft (LCA) Naval Protytype-1 (NP-1), a trainer, took off from the Shore Based Test Facility (SBTF) at INS Hans in Goa for the first time. As reported by OneIndia recently, the NP-1 was piloted by Cmde Jaideep Maolankar, Chief Test Pilot of National Flight Test Centre (NFTC) situated in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X