For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் சமர்ப்பிப்பது கட்டாயம்... உச்சநீதிமன்றம் உத்தரவு

மொபைல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: செல்போன் வைத்திருப்போர் ஆதார் எண் சமர்ப்பிப்பது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகள் , வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Link all mobile numbers to Aadhar within 1 year: SC tells Centre

பண புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல் முறையில் வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசு உத்வேகம் செய்து வரும் நிலையில், செல்போன் பரிமாற்ற பாதுகாப்பை வலுப்படுத்த மொபைல் போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம். இதனால் மொபைல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கிரிமினல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்போன்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கவே கண்டிப்பான இந்த உத்தரவு என்று கோர்ட் தெரிவித்துள்ளது. செல்போன் சிம் கார்டு பெறுபவர்கள் யார், எங்கிருப்பவர்கள் என்ற விவரங்கள் எதுவும் முறைப்படி விசாரணை இல்லாமல் நாட்டில் சுமார் 5 கோடி ப்ரீபெய்டு சந்தாராரர்கள் இருக்கிறார்கள் என்று 'லோக் நிதி பவுண்டேஷன்' என்னும் அமைப்பு தொடர்ந்த ஒரு பொது நல வழக்கையடுத்து தலைமை நீதிபதி ஹேகர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சு இல்வாறு உத்தரவிட்டது.

நீதிபதி ஹேகர் கூறுகையில் "படிப்படியாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். ஆதார் எண்ணை தராதவர்கள் ரீசார்ஜ் செய்வதை தடுத்து, கண்டிப்பு செய்து வாடிக்கையாளர்கள் பற்றிய முழு விவரத்தையும் தீர விசாரித்தறியலாம்" என்று கூறினார்.

English summary
The Supreme Court on Monday directed the Centre to ensure that the Aadhar number of every phone subscriber should be registered within a year. The SC set an outer limit of 1 year for the Centre to register details of each mobile phone subscriber including those with pre-paid connections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X