For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட்: மாதம் 1 ரூபாய் செலுத்தினால் ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு!

Google Oneindia Tamil News

டெல்லி : ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படும் என பொது பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார்.

Live Budget 2015: In FM Arun Jaitley proposes insurance coverage of Rs 2 lakh for premium of Rs 12

அதில் அவர், ‘ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு அளிக்கப் படும். இதேபோல், 18-50 வயத்துக்குள் உள்ளவர்களுக்கு ரூ.350 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு திட்டமும் அறிவிக்கப் பட்டுள்ளது.

காப்பீடு பெற்றவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த இரண்டு லட்ச ரூபாய் வழங்கப் படும். நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும் என அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கு ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா' எனப் பெயரிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
Govt to launch PM Suraksha Bhima Yojana, offering coverage of Rs 2 lakh for just premium of Rs 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X