For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொச்சி உட்பட கேரளாவின் சில இடங்களிலும் லேசான நில அதிர்வு... பாதிப்பு ஏதுமில்லை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொச்சி: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் கேரள மாநிலத்தின் கொச்சி உள்ளிட்ட சில நகரன்களில் லேசான நிலஅதிர்வாக உணரப்பட்டது.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை 11.30 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலைகள் பாளம் பாளமாக விரிந்தன. கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் 7.9 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. வட இந்தியாவிலும் நில நடுக்கப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கேரள மாநிலம் கொச்சி, கல்லூர், கடவந்தரா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.இது மிக லேசான நில அதிர்வுதான் என்றும் 3 ரிக்டெர் அளவிற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நில அதிர்வு சில வினாடிகள் மட்டுமே உணரப்பட்டதாக எர்ணாகுளம் மாவட்ட மாஜிஸ்திரேட் பி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நில அதிர்வினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

நில அதிர்வு ஏற்பட்ட உடன் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி சாலைகள், தெருக்களுக்கு விரைந்ததாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Low intensity tremor in Kochi

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் கேரள மாநிலம் கொச்சியிலும் லேசான நில அதிர்வாக உணரப்பட்டது. அம்மாநிலத்தில் கல்லூர், கடவந்தரா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது 3 ரிக்டெர் அளவிற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
A low intensity tremor was felt in some parts of Kochi on Saturday, triggering panic among people residing in high rise buildings, officials said. Officials said experts in the Seismology Department are assessing whether it was an after effect of the high-intensity quake that rocked Delhi and many parts of East and North India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X