For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்டிசி விதிகளில் திடீர் மாற்றம்.. திருமணமாகாத ஊழியர்களும் நாட்டை சுற்றிப் பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் எல்டிசி விடுமுறை சுற்றுப்பயண சலுகை விதிமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை திருமணமான ஊழியர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பயன்படுத்த முடிந்தது. திருமணமாகாதவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு மட்டுமே போக இதைப் பயன்படுத்த முடியும் என்று இருந்தது. தற்போது இதை மாற்றியுள்ளது மத்திய அரசு.

புதிய திருத்தத்தின்படி திருமணமாகாத மத்திய அரசு ஊழியர்களும் எல்டிசியைப் பயன்படுத்தி நாடு முழுவதும் சலுகைக் கட்டணத்தில் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம்.

சொந்த ஊர்களுக்கு மட்டும்

சொந்த ஊர்களுக்கு மட்டும்

இதுகுறித்து மத்திய அரசின் பெர்சனல் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘எல்டிசியைப் பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு மட்டுமே போக முடியும் என்று சலுகை உள்ளது.

நாடு முழுவதும் சுற்றலாம்

நாடு முழுவதும் சுற்றலாம்

தற்போது அது மாற்றப்பட்டு, அதை நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கும் வசதி கொண்டதாக மாற்றியுள்ளது அரசு. இது திருமணமாகாத அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

பேச்சலர்களுக்கும் வாய்ப்பு

பேச்சலர்களுக்கும் வாய்ப்பு

புதிய மாற்றத்தின்படி எல்டிசியைப் பயன்படுத்தி திருமணமாகாத மத்திய அரசு ஊழியர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியும்' என்று கூறப்பட்டுள்ளது.

பயணக் கட்டணச் செலவு

பயணக் கட்டணச் செலவு

எல்டிசி என்பது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விட்டுத் திரும்பியதும், போக, வர ஆன பயணக் கட்டணச் செலவை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

English summary
Unmarried central government employees can now avail benefits of Leave Travel Concession (LTC) for visiting any part of the country, as per a relaxation in the rule, which earlier restricted them to use the facility for going to their hometown only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X