For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா சட்டசபை இடைத்தேர்தல்: தஸ்கோவன் தொகுதியில் தேசியவாத காங். வெற்றி!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மகராஷ்டிராவில் தஸ்கோவன் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சுமன் பாட்டீல் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவின் தஸ்கோவன் மற்றும் பந்த்ரா கிழக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தஸ்கோவனில் மறைந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டீல் மனைவி சுமன் பாட்டீல் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிரதான கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை.

Maharashtra bypoll results: Shiv Sena’s Trupti Sawant defeats Cong in Bandra East; NCP Suman Patil retains Tasgaon seat

இத்தொகுதியில் சுமார் 1.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுமன் பாட்டீல் வென்றுள்ளார். இதேபோல் பந்த்ரா கிழக்கு தொகுதியில் சிவசேனா வேட்பாளர் திருப்தி சாவந்த் தம்மை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நாராயணன் ரானேவை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

6 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் நாரயண் ரானே தோல்வியைத் தழுவியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
In the crucial Maharashtra Assembly bypoll, former Maharashtra Chief Minister Narayan Rane today lost to ruling Shiv Sena‘s Trupti Sawant in Bandra (East), his second consecutive defeat in six months, raising questions over his fate in Congress. NCP nominee and late R R Patil’s wife Sumantai Patil won in Tasgaon-Kavathe Mahankal Assembly constituency of Sangli district by over 1.12 lakh votes as the Sharad Pawar-led party retained the seat. No major party had put up candidate against her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X