For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய கொடியில் கரப்பான்பூச்சியைப் போட்ட பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்திற்கு சம்மன்!

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய கொடியில் கரப்பான்பூச்சி இருப்பது போன்ற விளம்பரம் செய்த பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனத்திற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Man summoned for insulting national flag

டெல்லியில் இயங்கி வரும் பூச்சிக்கொல்லி நிறுவனம் ஒன்று, ஒரு விளம்பரத்தைத் தயாரித்தது. தேசியக் கொடி மற்றும் அசோக சக்கரம் ஆகியவற்றின் பின்னணியில் கரப்பான் பூச்சி இருப்பது போல அதில் இருந்தது. இது தேசியக் கொடியை அவமானம் படுத்தும் செயல் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், இது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜூன் 30ம் தேதி நேரில் ஆஜராகும் படி அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் பெயர் டெர்மிங்கஸ். வருகிற ஜூன் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த நிறுவனத்திற்கு மாஜிஸ்திரேட் ஆகாஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

English summary
The proprietor of a pest control service firm was summoned as accused by a court for allegedly insulting the Indian flag by printing it and the Ashok Chakra on pamphlets along with the photo of a cockroach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X