காவிரி பிரச்சினையைத் தீர்க்க மேலாண்மை வாரியமே சிறந்த வழி: மத்திய நதிநீர் ஆணையம்

டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க காவிரி மேலாண்மை வாரியமே சிறந்த தெரிவு என்று மத்திய நதிநீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்துள்ளார். இந்த காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழக, கர்நாடக அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Management board an ideal option to end Cauvery impasse: CWC chief

இதை மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா வரவேற்று உள்ளார். டெல்லியில் அசோசேம் நிகழ்ச்சிகளுக்கிடையில் ஜி.எஸ்.ஜா செய்தியாளர்களிடம் பேசினார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைக்கும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் இடம்பெறுவர் என்று தெரிவித்தார்.

நீரைச் சேமித்து வைத்து தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கான போதிய வசதிகள் ஏற்படுத்தாவிட்டால் நீராதாரப் பாதுகாப்பு குறித்து நாம் ஒன்றுமே சிந்திக்க முடியாது. எனவே நீரைச் சேமித்துக் காக்கும் வழிமுறைகள் அவசியம் என்றார் ஜா.

எனவே, மத்திய அரசு காவிரிப்பிரச்சினையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படி இந்த விவகாரங்களில் சுமுகத் தீர்வு காண காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறந்த வழியாகும் என்று கூறியுள்ளார் ஜி.எஸ்.ஜா.

English summary
A Cauvery water management board, which is to be formed by the Centre on a direction of the Supreme Court, will have representatives from both Karnataka and Tamil Nadu, Mr. Jha said on the sidelines of an Assocham event here on Wednesday.
Please Wait while comments are loading...

Videos