For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவ் கொலை வழக்கு: பெல்ட் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது எம்டிஎம்ஏ

ராஜீவ் கொலை வழக்கில் பெல்ட் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையை எம்டிஎம்ஏ இன்று தாக்கல் செய்தது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய பெல்ட் வெடிகுண்டு பற்றிய விசாரணையை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது எம்டிஎம்ஏ குழு.

ராஜீவ் கொலை வழக்கில் பெல்ட் வெடிகுண்டு மற்றும் கொலை சதி தொடர்பாக விசாரிக்க பல்நோக்கு கண்காணிப்புக் குழு (எம்டிஎம்ஏ) அமைக்கப்பட்டது. இந்த குழு இன்னமும் இந்த விசாரணையை நடத்தி வருகிறது.

MDMA Submits report in SC on Rajiv Case

இதனிடையே ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்டிஎம்ஏவின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்தன.

குறிப்பாக பெல்ட் வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்பட்டது? என்பது தொடர்பான விசாரணை என்ன நிலையில் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் எம்டிஎம்ஏ குழு இன்று இந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சீலிட்ட கவரில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English summary
MDMA today submitted the report in a sealed cover on use of the Belt bomb, where it has been brought in Rajiv Gandhi assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X