For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யு.கே. டூ இந்தியா.. மருத்துவமனை கட்ட 32,000 கி.மீ கார் பயணம் செய்து நிதி திரட்டும் இந்திய பெண்

குஜராத் மாநில நகரத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக இங்கிலாந்தில் தொடங்கி பல்வேறு இடங்களுக்கு 32 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு காரில் பயணித்து வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். இந்த ச

Google Oneindia Tamil News

வதோதரா: குஜராத் மாநிலத்தில் உள்ள தமது சொந்த நகரத்தில் மருத்துவமனைக் கட்டுவதற்காக வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்மனியான பாருலதா காம்லே .32 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு காரில் பயணித்து நிதி திரட்டி சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

43-வயதுடைய பாருலதா என்ற பெண் குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அங்கு மருத்துவமனை ஒன்றைக் கட்ட திட்டமிட்டார். இதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரை சுமார் 32 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு காரில் தன்னந்தனியாக பயணித்துள்ளார். இந்த பயணத்தின் போது பல்வேறு இடங்களுக்குச் சென்று நிதி திரட்டியுள்ளார்.

Meet woman who completed 32,000-km to build a hospital

அப்போது, பெண்களை பாதுகாப்போம் பெண்ணிற்கு கல்வி கொடுப்போம் என்ற தகவலையும் மக்களிடையே அந்தப் பெண் பரப்பி வந்துள்ளார்.

குஜராத்தில் மாநில நவ்சாரி நகரத்தில் பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக வதோதராவில் தங்கினார். பின்னர் நிகழ்சியில் பங்கேற்ற அவர் தனது கார் பயணம் குறித்து கூறியதாவது:

சுமார் 32 ஆயிரம் கி.மீ தொலைவிற்கு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு காரில் தன்னந்தனியாக பயணித்தேன். அந்த பயணத்தின் போது மருத்துமனை கட்டுவதற்காக நிதி திரட்டினேன்.

57 நாட்களில் பெரும்பாலான நாடுகளில் சுற்றிய முதல் பெண் தாமாகத்தான் இருக்கும், இந்தப் பயணத்தில் 7 மலைக் குன்றுகள்,3 பிரதான பாலைவனங்கள், இரண்டு கண்டங்கள் ஆகியவற்றை கடக்க நேர்ந்தது.

கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 700 முதல் 4 ஆயிரம் கி.மீ உயரத்தில் அமைந்துள்ள மலைக் குன்றுகள் வழியாக சுமார் 5 ஆயிரத்து 500 கி.மீ தொலைவுக்கு பயணிக்க நேர்ந்தது என்று பிரமிப்புடன் அவர் கூறினார்.

மேலும், 32 நாடுகளின் மக்களைச் சந்தித்து மருத்துவமனைக் கட்டுவதற்காக தாம் நிதி திரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். இவரது இந்த கார் பயணம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Vadodara: A 43-year-old NRI woman from Navsari district of Gujarat successfully completed her solo car journey of 32,000 kilometre from United Kingdom to India and has expressed a desire to set up a healthcare facility in her native town. The woman, Bharulata Kamble made this announcement at her felicitation programme held in Navsari yesterday which was organised by local civic body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X