For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல்கலாமின் கடைசிநிமிடங்கள்.. கண்டுகொள்ளாமல் தூங்கபோன மாஜி ஆளுநர் சண்முகநாதன்.. பகீர் தகவல்கள்

அப்துல்கலாமின் கடைசிநிமிடங்களில் அவரை கண்டுகொள்ளாமல் தூங்கிப் போனார் மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் என பகீர் தகவலை ராஜ்பவன் ஊழியர்கள் வெளியிட்டுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மக்களின் குடியரசுத் தலைவராக திகழ்ந்த அப்துல்கலாம் மேகாலயாவில் மறைந்தபோது அம்மாநில ஆளுநராக இருந்த சண்முகநாதன் எப்படியெல்லாம் அலட்சியமாக நடந்து கொண்டார் என ராஜ்பவன் ஊழியர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேகாலயா ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் பாலியல் புகாரில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து சண்முகநாதனின் லீலைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கு 5 பக்க கடிதத்தை 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

அதில் ஆளுநர் மாளிகையை இளம்பெண்கள் கிளப்பாக எப்படியெல்லாம் சண்முகநாதன் மாற்றி வைத்திருந்தார் என விவரித்திருந்தனர் ராஜ்பவன் ஊழியர்கள். அதேபோல் மக்களின் குடியரசு தலைவராக திகழ்ந்த அப்துல் கலாம் மறைவின் போது ஆளுநராக இருந்த சண்முகநாதன் நடந்து கொண்ட விதம் குறித்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சண்முகநாதனின் பொய்

சண்முகநாதனின் பொய்

அந்த புகாரில், அப்துல்கலாமின் கடைசிநிமிடங்களில் தாமும் உடன் இருந்ததாக தொடர்ந்து சண்முகநாதன் பொய் கூறி வருகிறார். உண்மை அது இல்லை.

கலாமுக்கு உடல்நல குறைவு

கலாமுக்கு உடல்நல குறைவு

அப்துல்கலாமுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஷில்லாங்கில் பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அப்துல்கலாமை சென்று பார்க்குமாறு சண்முகநாதனிடம் கூறினோம்.

தூங்கப் போன சண்முகநாதன்

தூங்கப் போன சண்முகநாதன்

ஆனால் அப்துல்கலாமை பார்க்க அவர் செல்லாமல் படுக்கை அறைக்குப் போய்விட்டார். சண்முகநாதன் தூங்கிக் கொண்டிருந்தபோது பிரதமர் போன் செய்த பின்னரே மருத்துவமனைக்கு சண்முகநாதன் ஓடினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தமிழகத்தைச் சேர்ந்த மக்களின் மதிப்புக்குரிய இந்திய குடியரசு தலைவராக திகழ்ந்த அப்துல்கலாமை காப்பாற்ற ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் அக்கறை காட்டாமல் தூங்கப் போய்விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Meghalaya Rajbhavan staffs said that Former Governor Shanmuganathan was not alongside Former President of India, Late APJ Abdul Kalam during his last breath in Shillong, but in reality Shanmuganathan was sleeping in his bedroom and only after the call from the Prime Minister made him run to Bethany Hospital, Shillong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X