For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரிக்கு குறுக்கே புதிய அணை கட்டும் பணி ஜனவரியில் தொடங்கும்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Mekedatu project will commence from January: Karnataka minister
டெல்லி: காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் இரு அணைகளை கட்டும் திட்டம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாட்டீல் மேலும் கூறியதாவது: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து அளிக்க வேண்டிய 192 டிஎம்சி தண்ணீரை தர முடியாது என்று கர்நாடகா கைவிரிக்கவில்லை. எஞ்சிய உபரி நீரை பயன்படுத்திக்கொள்ளத்தான் மேக்கேதாட்டு பகுதியில் இரு அணைகளை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருப்பது நியாயம் கிடையாது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை எதிர்கொள்ள கர்நாடகா தயாராக உள்ளது.

இரு அணைகளை கட்டி நீர் தேவையை பூர்த்தி செய்யவும், நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ளவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த விரும்பும் காண்ட்ராக்டர்களிடமிருந்து டிசம்பர் இறுதிவரை டெண்டர்கள் வரவேற்கப்படும். ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அணை கட்டும் பணிகள் தொடங்கும். இது உறுதி. இவ்வாறு எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

English summary
Karnataka minister M.P.Patil today defended his proposal to build a reservoir across the Cauvery river at Mekedatu to generate hydro-electric power, saying it is in conformity with the final order of the Cauvery Water Disputes Tribunal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X