For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணடித்த வாலிபரின் கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ: இளைஞருக்கு காப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பாவை பார்த்து கண் அடித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப் பாரம்பரிய மாளிகையை, ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பா ஆய்வு செய்தார். அப்போது, வாலிபர் ஒருவர் அவரிடம் தவறாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தன்னைப் பார்த்து கண் அடித்த வாலிபரை, அல்கா லாம்பா கன்னத்தில் அறையவே பரபரப்பு அதிகமானது இதையடுத்து, ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

'Mentally unstable' man misbehaves with AAP MLA Alka Lamba

அதிர்ச்சிரமான இந்த சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. அல்கா லாம்பா, தனது டுவிட்டரிலும் இதுதொடர்பான தகவலையும், போட்டோவையும் பதிவு செய்து உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அல்கா லாம்பா, ''அந்த வாலிபர் என்னை பார்த்து கண்ணை சிமிட்டினார். என்னை தவறான வழியில் பார்த்த அவர், நகராட்சி மன்றம் அருகே எனக்கு மிகவும் நெருக்கமாக வந்தார். உடனடியாக நான் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டேன். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட தொடங்கினார். ஆனால் அதற்குள் ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்று கூறியுள்ளார்.

போலீசாரிடம் அந்த வாலிபர், தான் மனநலம் சரியில்லாதவர் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதற்கான சரியான ஆவணங்களை அவருடைய பெற்றோர்கள் ஒப்படைக்கவில்லை. அதனால், போலீசாரிடம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளேன்" என்றும் அல்கா லம்பா கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த வாலிபர், பால்ஜீத் நகரை சேர்ந்த ராஜேஷ் என்று கூறி உள்ள போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

English summary
A youth, who claimed to be mentally unstable, was slapped by AAP MLA Alka Lamba when he allegedly tried to misbehave with her while she was inspecting heritage mansion of renowned poet Mirza Ghalib here today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X