For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேச தீவிரவாதி கர்நாடகாவில் கைது! லாரி டிரைவராக சுற்றி திரிந்தது அம்பலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாவணகெரே மாவட்டம் ஹொன்னாலி நகரில் ஜமாத் உல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த பாபனுர் ஹுசைன் (28) என்ற தீவிரவாதி பதுங்கியுள்ளதாக கர்நாடக போலீசாருக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி தகவல் கொடுத்தது. இதையடுத்து இன்று போலீசார் ஹுசைனை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

Militant from Assam has been arrested in Davangere

மேற்கு வங்கத்தின், பர்த்வான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் மேற்கண்ட தீவிரவாத அமைப்புக்கு தொடர்புள்ளது. எனவே, மேற்கு வங்கம் வழியாக கடந்த மாதம் பாபனுர் ஹுசைன் ஹொன்னாலி வந்துள்ளார். இங்கு லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்து தான், தீவிரவாதி என்பதை மறைத்து வாழ்ந்துள்ளார்.

தனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லை என்று உருகும்வகையில் பேசி, லாரி டிரைவர் வேலையை பெற்றதாக அவருக்கு வேலை கொடுத்த உரிமையாளர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில், பெங்களூருவில் போடோ தீவிரவாதி சஞட்சு போர்டோலி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு தீவிரவாதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A person suspected to be a militant from Bangladesh has been arrested in Davangere, Karantaka. The 28 year old Pabanur Hussain was today arrested in Davangere based on information that he could be involved in militant activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X