கர்நாடக சட்டசபையில் அனல் பறந்த காவிரி விவாதம்.. ஹாயாக 6 புள்ளி 6 வரிசை கோலம் போட்ட அமைச்சர்!

பெங்களூர்: காவிரி விவகாரம் குறித்து கர்நாடக சட்டசபையில் இன்று தீவிரமாக சிறப்பு விவாதம் நடைபெற்று வந்தபோது, அமைச்சர் உமாஸ்ரீ பேப்பரில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

Minister Umasri's action inside the Karnataka assembly become controversy

பாஜகவை சேர்ந்தவரான முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, காவிரி விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது கன்னட டிவி மீடியா கேமரா ஒன்றில் உமாஸ்ரீ கோலம் போட்டது பிடிபட்டது.

Minister Umasri's action inside the Karnataka assembly become controversy

காவிரி விவகாரம் அம்மாநிலத்தில் உணர்வுப்பூர்வமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், உமாஸ்ரீ அந்த விவாதத்தை கவனிக்காமல் கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உமாஸ்ரீதான், அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Umasri's action inside the Karnataka assembly cause criticism.
Please Wait while comments are loading...

Videos