For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசு வந்த பிறகு பாதுகாப்பு துறையில் ரூ.1.50 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (DAC) மூலமாக பாதுகாப்பு துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்து அதன் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையிலான இந்த குழு ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ரூ.78 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு கடந்த சில மாதங்களில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Modi Magic: Active DAC good news for Indian defence

அதில் மேக் இன் இந்தியா கோஷத்தின் கீழ் இயங்கும் வகையிலான திட்டங்களின் மதிப்பு மட்டும் ரூ.65 ஆயிரம் கோடியாகும். எனவே பெரும்பாலான பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவிற்குள்தான் உற்பத்தியாக போகின்றன என்பது உறுதியாகியுள்ளது. தனியாருடன் இணைந்தோ அல்லது தனித்தோ இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தளவாடத்தை உற்பத்தி செய்ய இந்த திட்டம் வகை செய்கிறது.

கடந்த ஆட்சி காலத்தில் டிஏசி ஆலோசனை கூட்டங்கள் அரிதாகவே நடைபெறுவது வழக்கம். ஆனால் புதிய ஆட்சி வந்த சில மாதங்களிலேயே இத்தனை சாதனைகள் நடந்துள்ளதாக கூறுகின்றனர் பாதுகாப்பு துறை வல்லுனர்கள். தற்போது மாதந்தோறும் டிஏசி, தனது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. பாதுகாப்பு அமைச்சராக முதலில் பொறுப்பு வகித்த அருண் ஜேட்லி காலத்திலேயே இந்த மாற்றங்களுக்கு விதை ஊன்றப்பட்டுவிட்து.

இப்போது மனோகர் பாரிக்கர் அதை முன்னெடுத்து செல்கிறார். பாதுகாப்பு அமைச்சக ஆண்டு செயல்பாட்டு அறிக்கையில், டிஏசி மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்றால் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ ஜெனரலான தமிழ்மணி 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், எங்கள் அமைப்பு வரும் வருடங்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் பிஸியாக இருக்க வேண்டிய சூழல் தற்போது உறுவாகியுள்ளது. நிர்பய் ஏவுகணையின் வெற்றி, புதிய தொழில்நுட்பங்களில் எங்களை முன்னிலைப்படுத்திவிட்டது.

தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து தளவாடங்களை உற்பத்தி செய்வதில் டிஆர்டிஓ மகிழ்ச்சியடைகிறது. தொழில் நிறுவனமும், பயனாளியும் முதல் நாளில் இருந்தே ஒன்றாக இணைவது நல்லதுதான் என்றார்.

பெங்களூரு குண்டு வெடிப்பில் காயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
The Defence Acquisition Council (DAC) has become more active since the Narendra Modi government came to power. The high-level body chaired by the Defence Minister has already taken some major decisions, much to the relief of the armed forces. Most importantly, the DAC has been meeting on a regular basis, fast-tracking crucial decisions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X