For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பகவத்கீதை போட்டியில் முதல் பரிசு… முஸ்லீம் சிறுமியை வாழ்த்திய மோடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: என் இளம் தோழியை பாருங்களேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். யார் அந்த சிறுமி என்று பார்த்தால், அவர் சமீபத்தில் "இஸ்கான்" இயக்கம் நடத்திய பகவத் கீதை போட்டியில் வென்ற முஸ்லீம் மாணவி.

சமீபத்தில், இஸ்கான் அமைப்பு பகவத் கீதை போட்டி நடத்தியது. அதில் மும்பையைச் சேர்ந்த மரியம் அசிப் சித்திக் என்னும் 12 வயது முஸ்லீம் மாணவி முதல் பரிசு பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று தனது பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது அவரை பாராட்டிய பிரதமர், அனைத்து மதங்கள் மீதும் செல்வி. மரியம் காட்டும் ஆர்வம் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார். மேலும், அவருக்கு பல்வேறு மதங்கள் குறித்த 5 புத்தகங்களை பிரதமர் பரிசளித்தார்.

Modi meets Mumbai girl Maryam Asif Siddiqui

இந்த சந்திப்பின் போது, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் சுவச்தா அபியான் சுகாதாரத் திட்டத்திற்கு செல்வி. மரியம் 11 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அப்போது சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது இளம் தோழியை சந்தியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Thursdaylauded 12-year-old Maryam Asif Siddiqui of Mumbai, who had won a contest on the Gita , saying her interest in various religions is an inspiration for all Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X