For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசு தின விழா.. அபுதாபி இளவரசர் வருகை.. விமான நிலையம் சென்று வரவேற்ற மோடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அபுதாபி இளவரசர் டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

இந்தியாவின் 68வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த முறை டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Modi receives Abu Dhabi Crown Prince at airport

இதன்படி, மூன்று நாள் பயணமாக அவர் இன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடி நேரில் சென்று அவரை வரவேற்றார்.

டெல்லியில் தங்கியிருக்கும் அவர் 26ம் தேதி, குடியரசு தின விழா அணிவகுப்பின் போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அணிவகுப்பை கண்டுகளிக்கிறார்.

அபுதாபி இளவரசர் தனது பயணத்தின் போது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இரு தலைவர்களையும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ஐக்கிய அமீரகம் - இந்தியா இடையே வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து அறிக்கை வெளியிட உள்ளனர்.

English summary
Signifying the high importance India attaches to its ties with the UAE, Prime Minister Narendra Modi on Tuesday personally went to Delhi airport to receive Crown Prince of Abu Dhabi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X