For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி பிரசாரம் செய்த முக்கால்வாசி தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி.. ராகுலுக்கோ முக்கால்வாசி தோல்விதான்

தேசிய அளவில் பார்த்தால் மோடியின் பிரசார வெற்றிக்கான ஸ்டிரைக் ரேட் 78 சதவீதமாகும். ராகுல்காந்தி ஸ்டிரைக் ரேட் 22 சதவீதம் மட்டுமே.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஐந்து மாநில தேர்தல்களின் புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தால், வாக்களிக்க சென்ற 5 வாக்காளர்களில் ஒருவர் மட்டுமே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதும், 4 பேர் பாஜகவுக்கு வாக்களித்திருப்பதும் உறுதியாகிறது.

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரின் பிரசார யுக்தி, மக்களை ஈர்க்கும் தன்மையில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. பாஜகவின் அபார வெற்றிக்கு மோடியின் சிறப்பான ஆட்டம்தான் காரணம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கிரிக்கெட் பாணியில் கூற வேண்டுமானால், மோடியின் ஸ்டிரைக் ரேட் 78 ஆகவும், ராகுல் காந்தியின் ஸ்டிரைக் ரேட் வெறும் 22-ஆகவும் இருப்பது கண்கூடு.

உ.பி. நிலவரம்

உ.பி. நிலவரம்

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், மோடி 23 மாநாடுகள், இரு பேரணிகளில் பங்கேற்றார். 118 சட்டசபபை தொகுதிகளை அவர் கவர் செய்திருந்தார். அதில் 99 சீட்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்லது. எனவே மோடியின் ஸ்டிரைக் ரேட், அதாவது வெற்றி சதவீதம் 86.4-ஆக இருந்தது உ.பியில்.

ராகுல்காந்தி நிலை

ராகுல்காந்தி நிலை

ராகுல் காந்தி, உ.பி.யில் 54 பிரசார மாநாடுகளை 46 சட்டசபை தொகுதிகளுக்குள் நடத்தியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி அதில் 7 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. இதில் 38 தொகுதிகள் பாஜக பாக்கெட்டுக்குள்தான் போகின. ராகுல்காந்தியின் ஸ்டிரைக் ரேட் 15 சதவீதம் மட்டுமே.

பஞ்சாப்பிலும் பரிதாபம்தான்

பஞ்சாப்பிலும் பரிதாபம்தான்

பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், 15 தொகுதிகளில் பிரசாரம் செய்த ராகுல்காந்தியின் ஸ்டிரைக் ரேட் 46 சதவீதம்தான். அதாவது, அவர் பிரசாரம் செய்த தொகுதிகளில் பாதிக்கும் மேல் காங்கிரஸ் தோற்றே உள்ளது. பஞ்சாப்பில் பிரதமர் 10 தொகுதிகளில் பிரசாரம் செய்தார். அதில் 4 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றுள்ளது. பாஜக தோற்ற மாநிலம் என்றபோதும், மோடியின் ஸ்டிரைக் ரேட் 40 சதவீதமாக உள்ளது.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்

உத்தரகாண்டில் மோடி 25 தொகுதிகளில் பிரசாரம் செய்தார். அதில் 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. ஸ்டிரைக் ரேட் 80 சதவீதமாகும். ராகுல் காந்தி பிரசாரம் செய்த 5 தொகுதிகளுமே பாஜக பாக்கெட்டுக்குள் போய்விட்டது. எனவே ராகுல்காந்தியின் ஸ்டிரைக் ரேட், முட்டைதான்.

மணிப்பூர்

மணிப்பூர்

மணிப்பூரில், மோடி பிரசாரம் செய்த, 26 தொகுதிகளில் 13ஐ பாஜக வென்றது. ஸ்டிரைக் ரேட் 50 சதவீதம். ராகுல் காந்தி பிரசாரம் செய்த ஒரு தொகுதியும் கூட பாஜகவுக்கே கிடைத்துள்ளது. கோவாவில் மோடி பிரசாரம் செய்த ஒரு தொகுதியையும் பாஜக வென்றுள்ளது. இங்கு ராகுல்காந்தியின் ஸ்டிரைக் ரேட் 50 சதவீதம்.

ஐந்து மாநில ஒப்பீடு

ஐந்து மாநில ஒப்பீடு

ஐந்து மாநிலங்களையும் சேர்த்து பார்த்தால் மோடி 180 தொகுதிகளை கவர் செய்து பிரசாரம் செய்துள்ளார். அதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி 140 தொகுதிகளை வென்று அசத்தியுள்ளது. எனவே தேசிய அளவில் பார்த்தால் மோடியின் பிரசார வெற்றிக்கான ஸ்டிரைக் ரேட் 78 சதவீதமாகும். அதாவது அவர் பிரசாரம் செய்த முக்கால்வாசிக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகதான் ஜெயித்துள்ளது. மோடியின் பிரசார வீரியத்தின் அளவை இது எடுத்துக்காட்டுகிறது. ராகுல்காந்தி 5 மாநிலங்களிலும் 69 தொகுதிகளை கவர் செய்யும் அளவுக்குதான் பிரசாரம் செய்தார். ஆனால் அதில் 15ல்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அவரது ஸ்டிரைக் ரேட் 22 சதவீதம்.

English summary
In total across the five states, Modi covered 180 seats and his party and allies won 140. That’s a nationwide strike rate of 78%. Gandhi campaigned across 69 constituencies and the Congress and partners won just 15 – a strike rate of 22%. The numbers tell the story of this election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X