For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன அமைதிக்கு வழிகாட்டும் யோகாவின் தேவை அவசியம் - பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம், சர்வதேச யோகா திருவிழாவில் மக்களிடம் உரையாற்றினார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ரிஷிகேஷ்: நம் மன அமைத்திக்கு வழிகாட்டும் யோகாவின் தேவை அவசியமாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி மார்ச் 7 வரை இந்த விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Modi speech at International Yoga Festival

இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகம் முழுவதும் தீவிரவாதம், பருவநிலை மாற்றம் ஆகியவை இன்று பயங்கரமாக அச்சுறுத்திக் கொண்டுள்ளன. நாடுகளுக்கிடையே அமைதியை நிலை நாட்ட வேண்டும். தனி நபர், குடும்பம், சமூகம் மற்றும் நாடுகளுக்கிடையே அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை யோகாவின் மூலம் கொண்டுவர முடியும்.

யோகா தனிப்பட்ட மனிதனின் சிந்தனை, செயல், அறிவு ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவந்து அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது. நம் மன அமைத்திக்கு வழிகாட்டும் யோகாவின் தேவை அவசியமாகிறது என்று கூறினார்.

English summary
Prime Minister Narendra Modi address the festival via video conferencing on the 29th edition of the International Yoga Festival on March 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X