For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா: ஹோட்டல் அறையில் கொடூர கொலை… தாய்,மகள் சடலம் மீட்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஹோட்டல் அறையில் மனைவி, மகளுக்கு தூக்கமாத்திரை கொடுத்து மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டான் ஒரு கெடூரன். விடுதி ஊழியர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து, தாயும் மகளையும் சடலமாக போலீசார் மீட்ட சம்பவம் கொல்கத்தாவில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

கொல்கத்தாவின் ரபி அகமது கித்வாய் சாலையில் உள்ள அந்த ஹோட்டலுக்கு திங்கட்கிழமை வந்த நபர் ஒருவர், தனது பெயர் சம்புநாத் குப்தா என்றும் தான் பீகாரிலிருந்து வருவதாகக் கூறி, தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் தங்குவதற்காக ரூம் ஒன்றினை வாடகைக்கு எடுத்தார். அதன்பிறகு அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

மூவரும் தங்கிய அறை திறக்கப்படவே இல்லை. இதனால் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் போலீசில் தகவல் கூறவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அறையில் தூக்க மாத்திரைகள் அங்கங்கே சிதறிக் கிடந்தது. போலீசார் அறையை முழுமையாக சோதனை செய்யும் போது, அலமாரி ஒன்றிற்குள் தாயும் மகளும் சடமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவர்கள் இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, ஆழ்ந்த தூக்கத்தில் அவர்கள் இருக்கும் போது உயரழுத்த மின்சாரத்தை அவர்களின் உடலில் செலுத்தி, இறந்து போன, பிஞ்சுக் குழந்தையையும் அதன் தாயையும் கயிற்றால் கட்டி அலமாரிக்குள் அடைத்து விட்டு, அவர்களுடன் வந்த நபர் தப்பி ஓடியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஹோட்டலில் அறையெடுத்து தங்கிய சம்புநாத் குப்தா என்ற அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொல்கத்தாவின் மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் இருந்து தாயும், மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In a span of two hours, the posh Park Street area turned into an epicenter of crime on Tuesday afternoon. A mother and daughter were found dead under mysterious circumstances at one of the biggest hotels on Rafi Ahmed Kidwai Road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X