For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வாரத்தில் 140 கிலோ எடை குறைப்பு... மும்பையில் எகிப்து நாட்டு குண்டு பெண்ணுக்கு சிகிச்சை

மும்பை மருத்துவமனையில் எடை குறைப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள எகிப்து நாட்டைச் சேர்ந்த உலகின் அதிக உடல் எடை கொண்ட பெண்ணுக்கு ஒரு வாரத்தில் 140 கிலோ எடை குறைந்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு மும்பை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் ஒரு வாரத்தில 140 கிலோ எடை குறைந்தது.

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த இளம்பெண் எமான் அகமது அப்துலட்டி (36). இவர் 11 வயதாக இருக்கும்போது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆனார். யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் மிகவும் குண்டானார்.

படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழித்த எமான், 500 கிலோ எடையுடன் உள்ளார். இவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் உள்ளது. உலகிலேயே மிகவும் குண்டான பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

 டாக்டர்களிடம் கோரிக்கை

டாக்டர்களிடம் கோரிக்கை

தனக்கு உடல் பருமனை குறைக்க தேவையான சிகிச்சை அளிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த டாக்டர்களிடம் எமான் கோரிக்கை விடுத்தார். ஆனால் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் அவருக்கு மும்பையைச் சேர்ந்த டாக்டர் முசாபல் லக்தவாலா எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை இலவசமாக செய்ய முன்வந்தார்.

 விமானத்தில் சிறப்பு படுக்கை வசதி

விமானத்தில் சிறப்பு படுக்கை வசதி

இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து எமான் பிப்ரவரி 11-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் மும்பை அழைத்து வரப்பட்டார். இதற்காக விமானத்தில் சிறப்பு படுக்கை தயாரிக்கப்பட்டு இருந்தது. முன்னெச்சரிக்கையாக அனைத்து அவசரகால மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களும் விமானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

 3 மாதங்கள் சிகிச்சை

3 மாதங்கள் சிகிச்சை

மும்பை விமான நிலையம் வந்தடைந்த எமான் அவசரகால மருத்துவ வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருந்த லாரியில் ஏற்றப்பட்டு சைஃபி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், அவர் லாரியில் இருந்து கிரேன் மூலம் மருத்துவமனையில் அவருக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். எமானுக்கு 3 மாதங்கள் உடல் எடை குறைப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு துணையாக அவரது சகோதரி சைமாவும் உடன் வந்துள்ளார்.

 140 கிலோ குறைப்பு

140 கிலோ குறைப்பு

இந்நிலையில் கடந்த வாரம் முதல் மருத்துவர் முசாபல் லக்தவாலா தலைமையிலான மருத்துவர்கள் இமான் அகமதுக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்போது குண்டு பெண்மணி இமான் 500 கிலோவிலிருந்து, 360 கிலோவாக குறைந்திருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 திரவ உணவு மட்டுமே

திரவ உணவு மட்டுமே

அந்த அறிக்கையில், உடல் பாகங்கள் தொடர்ந்து வீங்கக் கூடிய பிரச்சினை சிறுவயது முதலே இமானுக்கு இருந்திருக்கிறது. எனவே அவருக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குறைந்த உப்பு கொண்ட புரோட்டின் திரவ உணவு மட்டுமே வழங்கப்பட்டு வழங்கப்படுகிறது.

 குடல் சுருங்க சிகிச்சை

குடல் சுருங்க சிகிச்சை

மேலும் உடல் எடையைக் குறைக்க விரும்பி தங்கள் மருத்துவமனையை நாடி வருபவர்களுக்கு, குடலைச் சுருங்கச் செய்யும் அறுவைசிகிச்சை முறை மேற்கொள்ளப்படுவதாக சைஃபி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A bed-ridden Egyptian woman weighing 500 kg loses 140 kg weight in Mumbai Hospital by bariatric surgery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X