For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாம் அம்புபச்சி திருவிழாவில் 'ரேப்' பாபாவை வலைவீசி தேடும் மும்பை போலீஸ்

அஸ்ஸாம் அம்புபச்சி திருவிழாவில் ரேப் பாபா பதுங்கியிருக்கலாம் என மும்பை போலீஸ் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

By Mathi
Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாம் காமாக்யா கோவில் அம்புபச்சி திருவிழாவில் 'ரேப்' பாபா பதுங்கியிருக்கிறாரா என மும்பை போலீஸ் முகாம் போட்டு தேடி வருகின்றனர்.

அஸ்ஸாமில் ஆண்டுதோறும் நடைபெறும் காமாக்யா கோவில் அம்புபச்சி திருவிழாவில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் பங்கேற்பர். இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது.

Mumbai Police Hunt For Rapist’ Baba In Assam Temple

இந்நிலையில் மும்பை போலீசார் அஸ்ஸாமில் முகாமிட்டு பலாத்கார சாமியாரை வலைவீசி தேடி வருகின்றனராம். சைலால் ஹிராலால் ஜெதியா என்கிற மகாராஷ்டிராவின் ஷீரடியைச் சேர்ந்தவர் அந்த சாமியார், ஜெர்மன் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்திருக்கிறார்.

அத்துடன் அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு ரூ3 லட்சம் வரை பணம் கறந்திருக்கிறார். தொடர்ந்தும் பணம் கேட்டு சாமியார் நச்சரிக்க மகாராஷ்டிரா மாநிலம் தானே போலீசில் அப்பெண் புகார் அளித்தார்.

இதையடுத்து மும்பை போலீசார் தற்போது அஸ்ஸாமில் முகாமிட்டு அந்த போலி சாமியாரை தேடி வருகின்றனர். அம்புபச்சி திருவிழா நடைபெறுவதால் நிச்சயம் காமாக்யா கோவில் பகுதியில்தான் அந்த போலி சாமியார் நடமாட கூடும்... அப்படியே அமுக்கிவிடலாம் என மும்பை போலீசார் காத்திருக்கின்றனர்.

English summary
A team of Mumbai Police is in Guwahati looking for a self-proclaimed ‘baba’ in the Nilachal hills of Guwahati, atop which is situated the shaktipeeth Kamakhya temple, on allegations of rape and blackmail of a German tourist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X