For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இட்லி 20 பைசா, மசாலா தோசை 45 பைசா, உப்புமா 20 பைசா, காஃபி 15 பைசா... அசத்திய மும்பை கஃபே மெட்ராஸ்!!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: இட்லி 20 ரூபாய்க்கு விற்கிற காலத்துல என்னங்க காணாம போன 20 பைசாவுக்கு 1 இட்லியை தர்றாங்களா? 70, 80 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ரேட் நிலவரத்தைப் போய் இப்ப சொல்றீங்களே என்கிறீங்க...

உண்மைதான்... ஆனால் மும்பையில் உள்ள கஃபே மெட்ராஸ் இந்த விலைக்கு நேற்று இட்லி, தோசையை விற்று அசத்தியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

மும்பையில் மதுங்கா பகுதியில் இருக்கிறது கஃபே மெட்ராஸ்... அப்பகுதி மக்களுக்கு நேற்று இனிய அதிர்ச்சி காத்திருந்தது..

75வது ஆண்டு விழா

ஆம்..... கஃபே மெட்ராஸ் நிறுவனம் தொடங்கிய 75 ஆண்டுகளாவதை முன்னிட்டுதான் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதாவது கஃபே மெட்ராஸ் தொடங்கப்பட்ட 1940ஆம் ஆண்டு ஹோட்டலில் என்ன விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்பட்டதோ அதே விலைக்கு 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு விற்பனை செய்யப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு..

இதாங்க ரேட்

அடடே! என ஆச்சரியத்தில் மூழ்கிப் போன கஃபே மெட்ராஸ் பிரியர்களுக்கு காத்திருந்தது பேரின்ப அதிர்ச்சி...

ஆமாங்க ஒரு இட்லி 20 பைசா, மசாலா தோசை 45 பைசா, உப்புமா 20 பைசா, பில்டர் காஃபி 15 பைசா..ன்னா சும்மா இருக்குமா கூட்டம்..

இங்கிட்டும்தான்..

அதுவும் சுவை மிகுந்த கஃபே மெட்ராஸில்... என்றால் அள்ளியது கூட்டம்.... அங்க மட்டுமல்ல ட்விட்டரிலும்தான்... நேற்று ஒரே கொண்டாட்டம்தான்

டிரெண்டிங்

# CafeMadras என்ற ஹேஸ்டாக் உருவாக்கப்பட்டு அதுவும் சக்கைபோடு போட்டது.. செம டிரெண்டிங் காட்டிவிட்டது.. ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிட்ட பில்லை ட்விட்டரில் பதிவேற்ற... கடுப்பேத்றாங்க மைலார்டு என்றாகிவிட்டது...

நல்ல முயற்சிதான்!

English summary
With filter coffee priced at 15 paisa, a plate of masala dosa, upma and idli priced at 20 paisa each, patrons of Cafe Madras, Mumbai Matunga’s landmark restaurant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X