For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”நற்குணத்திற்கு மதம் தடையில்லை” – பகவத் கீதை போட்டியில் முதலிடம் வென்ற முஸ்லிம் மாணவி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் முஸ்லிம் மதத்தை சார்ந்த மாணவி ஒருவர் பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் வென்றார்.

மும்பையை சேர்ந்த மாணவி மரியம் சித்திக். 12 வயதான இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இஸ்கான் அமைப்பு சார்பில் பகவத் கீதை குறித்த போட்டி தேர்வை நடத்தியது.

Muslim girl in Mumbai wins Gita contest

இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதி்ல் மாணவி மரியமும் கலந்து கொண்டார். தேர்வு கொள்குறி வடிவில் நடத்தப்பட்டது.

மொத்தம் நூறு மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் மரியம் முதலிடம் வென்றார்.

இது குறித்து அவர் கூறுகையி்ல், " பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் தேர்வில் கலந்து கொண்டதாகவும், மற்றும் பிற மதத்தில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகளை கற்கும் ஆர்வம் காரணமாகவும் வெற்றி பெற முடிந்தது" என தெரிவித்துள்ளார்.

நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள மொழியும், மதமும் தடையில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்!

English summary
Twelve-year-old Maryam Siddiqui is a rank holder at the exams in school. But recently, the class VI student has aced a written competition based on the Bhagwad Gita.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X