For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமிதாப் பச்சனை பின்னுக்கு தள்ளினார் பிரதமர் மோடி... ட்விட்டரில் முதலிடம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ட்விட்டரில் பிரதமர் மோடி அமிதாப் பச்சனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ட்விட்டரில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை 2.20 கோடி பேர் பின்தொடர்ந்து வந்த நிலையில், நரேந்திர மோடியை 2.22 கோடி பேர் தற்போது பின்தொடர்கின்றனர்.

சமூக வலைதளத்தினை தற்போது ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன் வருகைக்கு ஏற்ப இணையதளத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. அதேபோல, சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Narendra Modi beats Amitabh Bachchan on Twitter

இந்நிலையில் மைக்ரோ பிளாக்கிங் எனப்படும் ட்விட்டரில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சான் தான் இந்தியாவில் இதுவரை அதிக பாலோவர்களை கொண்ட பிரபலமாக இருந்து வந்தார். ட்விட்டரில் அவரை 2.20 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அபிதாப் பச்சனை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை 2.22 கோடி தற்போது பின் தொடர்கின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை இணையவழி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் தெரியப்படுத்தி வரும் நரேந்தி மோடி, ட்விட்டரில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக பாலிவுட் நடிகர்களான மூன்று கான்கள் தான் அதிகமான பாலோவர்களை கொண்டுள்ளனர். ஷாருகான்(2.09 கோடி), சல்மான் கான்(1.91 கோடி), ஆமீர் கான்(1.83 கோடி) என அடுத்தடுத்து உள்ளனர்.

English summary
Prime Minister Narendra Modi became the most followed Indian on micro-blogging site Twitter with 22.2 million followers when he surpassed Bollywood actor Amitabh Bachchan who has 22 million followers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X