For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிதக்கும் சென்னை; மீட்புப் பணியில் மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்பதற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை வரவுள்ளனர்.

கன மழையால் சென்னை விமானம் மூடப்பட்டுள்ளது. இதனால் விமானச் சேவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர்.

National Disaster Rescue team Arriving in Chennai

பின்னர் அங்கிருந்து குழுக்களாக பிரிந்து செல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்பதற்கு 40 காற்றடைத்த படகுகள் மற்றும் உணவுப் பொருள்களையும் எடுத்து வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் அச்சப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறாமல் தங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வழங்குவார்கள் என குழுவின் தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.

ஏற்கெனவே 40 பேர் அடங்கிய 11 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவமும் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. மொத்தம் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள், மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் 011-2436 3260, 09711077372 ஆகிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

English summary
National Disaster Rescue team Arriving in Chennai for rescue operation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X