For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுள் மாநாட்டில் சிறப்புரையாற்றும் நெல்லையின் அறிவாளிப் பெண் விசாலினி!

Google Oneindia Tamil News

டெல்லி: கூகுள் நிறுவனத்தின் சார்பில் டெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச உச்சி மாநாட்டில் நெல்லையைச் சேர்ந்த பதினான்கே வயதான விசாலினி சிறப்புரை ஆற்ற உள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் இதுவரையில் 5 உலகசாதனைகள் படைத்த பாளையங்கோட்டை 9 ஆம் வகுப்பு மாணவி விசாலினி சிறப்புரை ஆற்ற உள்ளார்.

Nellai girl Vislaini participate in Google conference

கூகுள் ஆப்ஸ் பார் எஜூகேசன்:

இவர் கணினிதுறையில் கிளவுட் கம்யூட்டிங் கூகுள் ஆப்ஸ் பார் எஜூகேசன் என்ற தலைப்பில் காலை10.30மணி முதல் 11.30 மணிவரை ஒரு மணிநேரம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டு உள்ளார்.

திறமையானவர்கள் சந்திப்பு:

இந்த உச்சிமாநாட்டில் விசாலினியைத் தவிர ஜப்பான் சாகா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்ட்ரு மியர்காப் மற்றும் பிட்ஸ் பிலானி பல்கலைக்கழக கணினி துறைத்தலைவர் ராகுல்பானர்ஜி ஆகியோரும்உரையாற்ற உள்ளனர்.

உச்சி மாநாட்டில் சிறப்புரை:

கூகுள் நிறுவத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளி மாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல் முறைஆகும்.

Nellai girl Vislaini participate in Google conference

8 சர்வதேச மாநாடுகள்:

இதற்கு முன்னதாக விசாலினி மத்தியப்பிரதேச தலைநகர் போபால், கர்நாடகாவின் மங்களூரு, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட 8 சர்வதேச கணினி மாநாடுகளில் தலைமைவிருந்தினராகக் கலந்துகொண்டு கீநோட் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் பாராட்டுகள்:

14 வயதில் கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் சிறப்புரை ஆற்ற இருக்கும் நெல்லை பள்ளி மாணவி விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

அங்கீகாரம் தேவை:

எனினும், இதுவரையில் அவருக்கு சரியான அங்கீகாரம் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஐகியூ அளவு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் பள்ளிகளில் கூட இடம் கிடைக்கவில்லையாம்.

திறமைக்கு மரியாதை தேவை:

சிறந்த திறமைகள் இருந்து இதுபோன்ற திறமைசாலிகளை நாம் பெருமளவில் அங்கீகரிப்பதில்லை. அப்படி அங்கீகரித்தால் தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கின்ற புத்திசாலிகளாலும், திறமைசாலிகளாலும் இந்தியாவையே பெரும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது கவனிக்க தக்க ஒன்று.. கருத்தில் கொள்வார்களா ஆள்பவர்கள்?

English summary
A girl from Nellai district participate and giving a guest lecturer in Google‘s International conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X