For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதத்தின் பெயரால் ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு ஆள் சேர்க்கும் என்.ஜி.ஓ.க்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஆன்லைன் மூலம் ஜிஹாத்துக்கு ஆட்களை எடுப்பதை தடுப்பது தான் எந்த ஒரு பாதுகாப்பு ஏஜென்சிக்கும் கடினமாக வேலை ஆகும். அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்படுகிறது.

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களை உளவுத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் மதத்தை பரப்பவே நடத்தப்படும் சிறிய நிறுவனங்களால் தான் தலைவலியாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மதத்தை போதிக்கும் என்.ஜி.ஓ.க்கள்.

மதத்தை போதிக்கும் என்.ஜி.ஓ.க்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஐ.டி. நிறுவனங்கள்

ஐ.டி. நிறுவனங்கள்

அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளுக்கு சேர்க்கப்படும் 5ல் 4 பேர் ஏன் 5ல் 5 பேரும் அதிகம் படித்தவர்களாக உள்ளனர். ஏழ்மையால் வாடுபவர்கள் மற்றும் வேலையில்லாதவர்கள் தான் தீவிரவாதிகள் ஆவார்கள் என்று இல்லை. தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளவர்களில் ஏராளமானோர் படித்தவர்கள் அதிலும் என்ஜினியர்கள்.

பெங்களூர்

பெங்களூர்

ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த பலர் அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளில் அதிகம் சேர்கிறார்கள். இதனால் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் தீவிரமாக கண்காணிப்படுகின்றன.

ஊழியர்கள்

ஊழியர்கள்

ஐ.டி. நிறுவனங்களை அல்ல மாறாக அங்கு பணியாற்றுபவர்கள் தான் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இணையதளம் நடத்துவோரிடம் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் தான் பேசுகிறார்கள். அத்தகையவர்கள் தான் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைக்குமாறு உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகம் உள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அளித்து அவர்களை தீவிரவமாக கண்காணிக்குமாறு உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளோம் என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

என்.ஜி.ஓ.க்கள்

என்.ஜி.ஓ.க்கள்

மதத்திற்காக பணியாற்றும் என்.ஜி.ஓ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில என்.ஜி.ஓ.க்கள் தீவிரவாதத்தை பலவகையில் ஊக்குவிக்கின்றன. மத மாற்றம் ஒரு பக்கம் நடக்கிறது. மறுபக்கம் தீவிரவாத அமைப்புகளுக்கு என்.ஜி.ஓ.க்கள் ஆட்களை சேர்த்து வருகின்றன. வாரங்கால், குல்பர்கா, சேலம், கோட்டயம், ஹுப்பாளி, பிதார் ஆகிய இடங்களில் உள்ள என்.ஜி.ஓக்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவை பற்றி போதிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றது. அந்த என்.ஜி.ஓ.க்கள் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்களை அனுப்பி வைக்கிறது என்று உளவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆர்வம்

ஆர்வம்

தீவிரவாத அமைப்புகளில் சேர வாலிபர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர வேண்டும் எனில் சிரியா அல்லது ஈராக்கிற்கு தான் செல்ல வேண்டி இருந்தது. தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆப்கானிஸ்தானில் கிளை துவங்கியுள்ளதால் இந்த பிரச்சனை மேலும் பெரிதாகியுள்ளது.

English summary
Battling the threat of online Jihadi recruitment is one of the hardest battles for any security agency. While accounts sympathetic to the Al-Qaeda and the ISIS are under surveillence, Intelligence Agencies are now closely watching the activities of employees in IT firms. In addition to monitoring the employees of various IT firms, there is also a lot of heat being generated on small firms that are specifically run to promote religion. In other words the NGO’s for religion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X