For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை

Google Oneindia Tamil News

டெல்லி : நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கு வேறு சில வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் டெல்லி மற்றும், சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நிர்பயா பரிதாபமாக உயிரிழந்தார்.

prison

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய வினய்சர்மா, அக்சய் தாகூர், முகேஷ் மற்றும் பவன் குப்தா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை ராம் ஆதார் என்பவரை வினய்சர்மா உள்ளிட்ட 4 பேரும் மிரட்டி, செல்போன் மற்றும் ரூ.1,500 பணத்தை பறித்தனர்.

இந்த வழக்கில் 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ரிதேஷ் சிங் தீர்ப்பு வழங்கினார்.

English summary
The four death row convicts in the Nirbhaya gang-rape and murder case were on Wednesday awarded ten years imprisonment by a trial court in a separate robbery case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X