For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசாரணைக்கு ஒத்துழைப்பவரை கைது செய்யக் கூடாது- உச்ச நீதிமன்றம் அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: வழக்குகளில் விசாரணைக்கு ஒத்துழைப்பவரை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

"உரிய வகையில் ஒத்துழைக்கும் நபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதை தவிர்க்க வேண்டும்" என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

no arrest in inquiry - supreme court

இதுகுறித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் நாரிமன் அடங்கிய அமர்வு உத்தரவில், "குறிப்பிட்ட வழக்கு குறித்த விசாரணையில் உரிய தகவல்களை தந்து விசாரணைக்கு ஒத்துழைப்பவரை தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது.

ஏனெனில், ஒரு நபரின் கைது என்பது அவரை மட்டுமின்றி அவரின் குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. எனவே, விசாரணைக்கு ஒத்துழைப்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் செயலை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.

English summary
There is no arrest if one who surrender and cooperate with police inquiry, supreme court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X