For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளிக்கு அகல் விளக்கு போதும் – பட்டாசு வேண்டாமே: சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்க கடலில் உருவான ஹூட் ஹூட் புயல் கடந்த 12 ஆம் தேதி ஆந்திராவை தாக்கியது.

புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதவரி ஆகிய 4 மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உருக்குலைந்து போனது. வீடுகள் இடிந்தது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.

No crackers in Visakhapatnam: CM Chandrababu Naidu

மீட்பு பணிகள் தீவிரம்:

புயல் பாதித்த மாவட்டங்களில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

தீவிபத்து நடக்க வாய்ப்பு:

மரங்கள் முறிந்ததால் சாலை முழுக்க இலை, சருகுகள் உதிர்ந்து கிடக்கிறது. இதில் பட்டாசு பொறிபட்டு தீ விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.

அகல் விளக்கு தீபாவளி:

எனவே யாரும் தீபாவளியை கொண்டாட பட்டாசு வெடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி அமைதியாக கொண்டாடுங்கள். தீபாவளி கொண்டாட அரசு சார்பில் அகல் விளக்கும், எண்ணையும் வழங்கப்படும்.

உடமைகள் இழப்பு:

புயல் பாதித்த மாவட்டங்களில் கிராமப்பகுதி மக்களுக்கு உணவு பொருள் கூட கிடைக்கவில்லை. உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

பட்டாசு வெடிக்காமல் கொண்டாடுங்கள்:

அவர்கள் சோகத்தில் இருக்க இன்னொரு புறம் மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது தேவையற்றது. பட்டாசுக்கு செலவழிக்கும் பணத்தை இல்லாத ஏழைகளுக்கு வழங்கி உதவி செய்ய மக்கள் முன் வர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டு உள்ளார்.

English summary
Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu said that the sale of firecrackers will be prohibited in Vizag. He wanted the Vizagites not to burst crackers this Diwali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X