For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடை நீடித்தால், மும்பையில் இருந்து ஒரு விமானத்தை கூட புறப்பட விடமாட்டோம்- சிவசேனா பகிரங்க மிரட்டல்

ஏர் இந்தியவில் பயணம் செய்ய எம்பி கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடித்தால் மும்பையில் இருந்து ஒரு விமானத்தை கூட புறப்பட விடமாட்டேம் என சிவசேனா எம்பிக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஏர் இந்தியவில் பயணம் செய்ய எம்பி கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடித்தால் மும்பையில் இருந்து ஒரு விமானத்தை கூட புறப்பட விடமாட்டேம் என சிவசேனா எம்பிக்கள் பகீரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் அவர்கள் அமளியிலும் ஈடுபட்டனர்.

கடந்த 23ஆம் தேதி புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்ற சிவசேனா எம்பிக்கு பிசினஸ் வகுப்பில் இல்லாமால் எகானமி வகுப்பில் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியப் பிறகும் எம்பி கெய்க்வாட் இறங்காமல் விமானத்திலேயே அமர்ந்திருந்தார்.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் கெய்க்வாட்டுடன் சமாதானம் பேசியுள்ளார். அப்போது பிசினஸ் வகுப்பில் சீட் கிடைக்காத கோவத்தில் இருந்த கெய்க்வாட் ஊழியரை 25 முறை செருப்பால் அடித்தார்.

தடை விதித்த ஏர் இந்தியா

தடை விதித்த ஏர் இந்தியா

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எம்பி மீது ஊழியரை தாக்கியது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கெய்க்வாட் ஏர்இந்தியா நிறுவன விமானத்தில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டது.

முதலில் ஊழியர்தான் திட்டினார்

முதலில் ஊழியர்தான் திட்டினார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்பிக்கள் இப்பிரச்சனையை எழுப்பினர். அப்போது ஏர் இந்தியா நிறுவன ஊழியர்தான் முதலில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கெய்க்வாட் கூறினார். அந்த ஊழியர் தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிவித்தார்.

நீ ஒன்றும் பிரதமர் மோடி இல்லை

நீ ஒன்றும் பிரதமர் மோடி இல்லை

மேலும் தனது சட்டையின் காலரை பிடித்து இழுத்து கீழே இறங்கும்படி அவர் கூறினார். நீ ஒன்றும் பிரதமர் மோடி இல்லை. எம்பிதான் என்றும் கூறினார். இதனால்தான் நான் அவரை அடித்தேன் என்றும் தெரிவித்தார்.

சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை

சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை

ஆனால் விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் ராஜூ பேசுகையில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்டும் ஒரு பயணிதான், விமான பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி

நாடாளுமன்றத்தில் கடும் அமளி

மேலும் இந்த தடை நடவடிக்கையானது நீடித்தால், மும்பையில் இருந்து ஒரு விமானத்தை கூட புறப்பட விடமாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து நடாளுமன்றம் பகல் 1.15 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

English summary
Shiv sena MPs warns in Parliement that No No flights can fly from Mumbai if ban continues for Gaikwat in Air india.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X