For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஜனாதிபதி செயலருடன் விவேக் நாக்பாலுக்கு தொடர்பு என்பது தவறானது'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லண்டனில் பதுங்கி இருக்கும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் செயலாளர் ஒமிதா பெளலுக்கும் நேபாளத்தின் விவேக் நாக்பாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நாம் வெளியிட்டிருந்த செய்தி தவறானது. இச்செய்தியை வெளியிட்டதற்காக நாம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, அப்போது நிதியமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமலாக்க இயக்குநரகத்தின் நடவடிக்கைக்கு என்னை ஆளாக்கினார் என்றும் லலித் மோடி கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலாளர் ஒமிதா பெளல், நேபாளத்தைச் சேர்ந்த விவேக் நாக்பாலுக்கு நெருக்கமானவர் என்றும் லலித் மோடி கூறியிருந்தார். இதை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் கடந்த ஜூன் 24-ந் தேதி வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தமக்கும் ஒமிதா பெளலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்படி வெளியான செய்தி தவறானது என்று விகேவ் நாக்பால் விளக்கம் அளித்துள்ளார். தவறான செய்தியை வெளியிட்டதற்காக எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

English summary
Nepal's Vivek Nagpal said that, he had no link with India's President's secretary Omita Paul. We regret that news was published by our portal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X