For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு:உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மீண்டும் தமிழகத்தின் முதுகில் குத்தியது மத்திய பாஜக அரசு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி குறிப்பது மத்திய பாஜக அரசு தமிழினத்தின் முதுகில் மீண்டும் குத்திவிட்டது. ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதை காரணம்காட்டி அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என சொல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என இந்திய மத்திய பாஜக அரசு மீண்டும் தமிழ்நாட்டின் முதுகில் குத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு என்பது தமிழினத்தின் பண்பாட்டு அடையாளம்; அது தமிழினத்தின் கலாசார உரிமை; இதற்கு தடை விதிக்க கூடாது என தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களும் போர்க்களமாக மாறிவிட்டது.

No ordianance; matter is sub-judice, says Modi

இதையடுத்து வேறுவழியின்றி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க மோடியிடம் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.

அப்போது, ஜல்லிக்கட்டு கலாசாரத்தை மத்திய அரசு பாராட்டுகிறது; ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு தரும்; அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என மோடி கூறியிருக்கிறார்.

அதாவது தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தம்மால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என கூறிவிட்டது மத்திய பாஜக அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது வரிந்து கட்டிக் கொண்டு போய் அதெல்லாம் முடியாது என சொன்ன மத்திய பாஜக அரசு இப்போது உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி தமிழினத்தின் உணர்வை மதிக்காதது ஒரு தேசிய இனத்தை அவமதிப்பதாகும்.

அதுவும் தன்னெழுச்சியான போராட்டங்களால் தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறது இந்திய மத்திய பாஜக அரசு. இது தமிழகத்தில் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லப் போகிறது என்பதை மத்திய பாஜக அரசு உணர்ந்ததாக இல்லை.

English summary
Prime Minister Narendra Modi said that, While appreciating the cultural significance of Jallikattu, the matter is presently sub-judice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X