For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தை "சிரித்து" இடையூறு செய்த மலையாள நடிகர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

Now, an actor held in Kerala for laughing at a Youth Congress meeting
ஆழப்புழா: இளைஞர் காங்கிரஸ் கூட்டத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிரித்ததாகக் கூறி மலையாள நடிகர் அனூப் சந்திரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய போலீஸார் எத்தனையோ வழக்கு விசாரணைகளில் பல ஆண்டுகளாக துப்பு துலக்கக் கூட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் விசித்திரமான வழக்குகளில் உடனே செயல்படுவதாக காட்டிக் கொண்டு அசிங்கப்பட்டு நிற்பதும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு உதாரணம்தான் கேரள மாநிலம் ஆழப்புழாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. ஆழப்புழாவில் இளைஞர் காங்கிரஸ் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் சிலர் பேசிய பேச்சைக் கேட்டு நடிகர் அனூப் சந்திரன் சிரித்திருக்கிறார்.

அவர் சிரித்தது தங்களது கூட்டம் நடத்துவதற்கு இடையூறாக இருந்தது என போலீசில் புகார் செய்ய கேரள மாநில போலீசாரோ உடனே "விரைந்து" சென்று நடிகர் அனூப் சந்திரனை கைது செய்திருக்கின்றனர்.

சரி நடிகர் அனூப் சந்திரன் இதற்கு என்ன பதில் சொல்கிறார் "கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகேதான் என் வீடு உள்ளது. நான் கூட்டத்தில் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த திட்டம் என்றார். இதைக் கேட்டு நான் சிரிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்? இந்த பேச்சைக் கேடால் இயல்பாகவே சிரிக்கத்தானே தோன்றும்.. அதைத்தான் நானும் செய்தேன். என்றார்.

இப்போது இந்த விவகாரம் அரசியலாகிக் கொண்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட நடிகர் அனூப் சந்திரனை விடுதலை செய்ய வேண்டும் என்று இடதுசாரிகள் களத்தில் குதித்திருக்கின்றன.

English summary
In Kerala on Friday police arrested a movie actor for allegedly disrupting a youth congress meeting in Alappuzha district. The actor insulted the leaders and disrupted the meeting, sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X