For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீடு, கார், டிவி மாதிரி ரூ. 500-க்கு துப்பாக்கியும் வாங்கனும்- படேல் தலைவர் 'விஷால்' பகீர் பேச்சு

By Mathi
Google Oneindia Tamil News

சூரத்: வீடு, கார், டிவி வாங்குவது போல துப்பாக்கியும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று இடஒதுக்கீடு கோரி போராடும் படேல் சமூகத்தைச் சேர்ந்த விஷால் வசோயா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத்தில் படேல் சமூகத்தினர் "எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடு.. இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையையே ஒழி" என்று முழக்கத்தை முன்வைத்து ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் படேல் சமூகத்தினர் பலரையும் அம்மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

Now it's time for you to purchase guns, says Patel leader

இந்த நிலையில் ஹர்திக் படேலின் சகாவான விஷால் வசோயா 'துப்பாக்கிகளை வாங்கி வையுங்கள்' என்று பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் விஷால் பேசியிருப்பதாவது:

நாம் ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்குகிறோம்.. ரூ 10 லட்சத்துக்கு கார் வாங்குகிறோம். ரூ50,000 டிவி வாங்குகிறோம்.. மொபைல் போன்கள ரூ20,000 கொடுத்து வாங்குகிறோம்...

தற்போது வீர மகன்களே! நீங்கள் ரூ500 கொடுத்து துப்பாக்கி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் குடும்பத்தை யாரும் பாதுகாக்க முடியாது...

நீங்கள் தாக்கப்படும் போது உங்கள் வசம் இருக்கும் ஆப்பிள் போன் உங்களைக் காப்பாற்றாது... ஆகையால் உங்கள் வீட்டுக்குள் ஆயுதங்களை வைத்திருங்கள்..

நம் தலைவர் ஹர்திக் படேல், துப்பாக்கியுடன் இருக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள்.. அது மகிழ்ச்சியளிக்கிறது...

இவ்வாறு விஷால் பேசியிருக்கிறார்.

அண்மையில் ஹர்திக் படேல், நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்.. உங்களால் 4 அல்லது 5 போலீசாரை கொல்ல முடியும் என்று ஹர்திக் படேல் பேசிய வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அவரது இயக்க நிர்வாகி துப்பாக்கி ஏந்துங்கள் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.

English summary
Vishal Vasoya, Joint convener of Hardik Patel led Patidar Anamat Andolan Samiti said all patels should purchase gun for saftey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X