For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலப்பு திருமண தம்பதியருக்கு ரூ.1 லட்சம்.. ஒடிஷா அரசு சபாஷ் அறிவிப்பு!

கலப்பு திருமணத் தம்பதியரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ. 1லட்சம் வழங்கப்படும் என ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமண தம்பதியருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.

சமூகத்தில் சாதி வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தை ஏற்படுத்த ஒடிஷா மாநில அரசு கலப்பு திருமணங்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Odisha government hikes cash for inter-caste marriage to one lakh

கடந்த 2007ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொள்வோருக்கான தொகை 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக ஒடிஷா அரசு உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்தத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை பெறத் திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இந்தத் தொகை பணமாகக் கையில் கொடுக்கப்பட மாட்டாது. நிலமாகவோ, வீட்டுக்குத் தேவையான பொருட்களாகவோ வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

English summary
Odisha government has hiked cash for inter-caste marriage from Rs 50,000 to 1 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X